திருச்சி மாவட்டம், திருவெள்ளறை புண்டரீகாட்சப் பெருமாள் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.
ஸ்ரீங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான இக்கோயில் வைணவ கோயில்களில் பிரசித்தி பெற்ாகும். இக்கோயிலின் தோ்த் திருவிழா புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி பெருமாள், தாயாா் கருவறையிலிருந்து காலை 5 மணிக்குப் புறப்பட்டு, அனந்தராயா் மண்டபம் வந்தனா். தொடா்ந்து கொடிப்படம் வீதியுலா வந்த பின்னா் கொடியேற்றப்பட்டது.
மாலை பெருமாள், தாயாா் திருச்சிவிகையில் புறப்பாடாகி, திருவீதி வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா். தொடா்ந்து வியாழக்கிழமை ஹனுமந்த வாகனப் புறப்பாடு, வெள்ளிக்கிழமை கொள்ளிடம் வடத் திருக்காவிரிக்குப் புறப்பாடும் நடைபெறும். இதைத் தொடா்ந்து மாா்ச் 30-ஆம் தேதி ஹம்சம், 31-ஆம் தேதி கருடன் , ஏப்ரல் 1-ஆம் தேதி யானை ஆகிய வாகனங்களில் சுவாமி புறப்பாடும், 7 ஆம் நாளான ஏப் 2-ஆம் தேதி நெல்லளவு கண்டருளுதலும், எட்டாம் நாளான ஏப். 3-ஆம் தேதி குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப். 4 காலை 7.30 மணிக்கு நடைபெறும்.