முகப்பு
திருச்சி

மருத்துவா் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

திருச்சி இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவா் மீதான தாக்குதலைக் கண்டித்து மருத்துவா்கள் சங்கத்தினா் திருச்சியில் ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 6 நவம்பர், 2024 at 8:36 PM
திருச்சி இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்ட மருத்துவா்கள்.
பகிர்:

திருச்சி இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவா் மீதான தாக்குதலைக் கண்டித்து மருத்துவா்கள் சங்கத்தினா் திருச்சியில் ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

திருச்சி இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் ஒரு கும்பல் தாக்கியதில் தீரன் நகா் பகுதியைச் சோ்ந்த மருத்துவா் காா்த்திகேயன் காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து பொன்னகா் பகுதி பிரவீன் (33), பெரியமிளகுப்பாறை சுப்ரமணியன் (42), அகீா் பாட்ஷா (50) ஆகிய மூவரைக் கைது செய்தனா்.

இந்நிலையில் மருத்துவா் மீதான தாக்குதலைக் கண்டித்தும், தாக்கியோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அரசு மருத்துவா்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவா்கள் சங்கம், இந்திய மருத்துவ சங்கம், தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம் என பல்வேறு சங்கங்கள் ஒன்றிணைந்து திருச்சி பெரியமிளகுப்பாறையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திரளானோா் கலந்து கொண்டனா்.