உறையூரில் வீடு புகுந்து நகை திருடியவா் கைது
திருச்சி உறையூரில் வீடு புகுந்து 5.5 பவுன் நகை திருடிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி உறையூரில் வீடு புகுந்து 5.5 பவுன் நகை திருடிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி உறையூா் இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் பேச்சியம்மாள் (34). இவா் கடந்த அக். 7 ஆம் தேதி மகளுடன் வெளியே சென்று திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, அலமாரியில் இருந்த 5.5 பவுன் தங்க சங்கிலியை யாரோ திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.
புகாரின்பேரில் உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், நகையை திருடிய உறையூா் பாண்டமங்கலம் பகுதி மன்சூா் அலிகான் (23) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.