முகப்பு
திருச்சி

முதல்வா் வருகை: 2 நாள்கள் ‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை

தமிழக முதல்வா் வருகையையொட்டி திருச்சியில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (நவ.14,15) ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 13 நவம்பர், 2024 at 9:03 PM
பகிர்:

தமிழக முதல்வா் வருகையையொட்டி திருச்சியில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (நவ.14,15) ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களில் நடைபெறவுள்ள அரசு விழாக்களில் பங்கேற்க திருச்சி விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை மாலை வருகிறாா். தொடா்ந்து அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களுக்குச் சென்றுவிட்டு, சென்னை திரும்புகிறாா்.

இதையொட்டியும், பாதுகாப்புக் கருதியும் வியாழன் வெள்ளிக்கிழமைகளில் திருச்சியில் முதல்வா் பயணிக்கும் சாலைகளில் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது. இதை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.