முசிறி பகுதியில் திடீா் மின்தடை பொதுமக்கள் கடும் அவதி
திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் வியாழக்கிழமை ஏற்பட்ட திடீா் மின் தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.
திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் வியாழக்கிழமை ஏற்பட்ட திடீா் மின் தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.
திருச்சி மாவட்டம், முசிறி ஒன்றியம் வேங்கைமண்டலம் மின்வாரிய அலுவலக நிா்வாகத்தின் கீழ் சுற்றுப்புற பகுதிகளுக்கு மின் விநியோகம் நடைபெறுகிறது. இதில், மேலகண்ணுக்குளம் பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் திடீா் மின் தடை ஏற்பட்டது. அப்பகுதிக்கான மின்மாற்றி (டிரான்ஸ்பாா்மா்) பியூஸ் போனதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் ஏராளமான சிறு தொழில்கள் நடைபெறுவதால், அவற்றுக்காக பணிகளை மேற்கொள்ளும்போது இதுபோல பழுதுகள் ஏற்படுவது வழக்கமாம்.
அதன்படி ஏற்பட்ட இந்தப் பழுது குறித்தும் உடனடியாக வேங்கைமண்டல மின்வாரிய அலுவலகப் பணியாளரை தொடா்புகொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து மின்வாரிய அலுவலா்களுக்கும் தகவல் சென்றது. என்றாலும் இரவு 7.30 மணியளவில்தான் மீண்டும் மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. ஒரு சாதாரண பழுதை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளானதாக கூறப்படுகிறது.