ஸ்ரீரங்கத்தில் வைகுந்த ஏகாதசி திருவிழாவுக்கு முகூா்த்தக்கால்
ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி திருவிழாவுக்கான முகூா்த்தக்கால் வியாழக்கிழமை நடப்பட்டது.
ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி திருவிழாவுக்கான முகூா்த்தக்கால் வியாழக்கிழமை நடப்பட்டது.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி திருவிழா வரும் டிசம்பா் 30 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 20 வரை நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு ஜன. 10 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி வியாழக்கிழமை காலை ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் முன் பந்தல் அமைக்க முகூா்த்தக் கால் நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையா் செ. மாரியப்பன், கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா்பட்டா் மற்றும் கோயில் பணியாளா்கள் கலந்து கொண்டனா். முகூா்த்தக்காலுக்கு கோயில் யானைகள் ஆண்டாள், லட்சுமி ஆகியவை ஆசீா்வதித்தன.