திருவானைக்கா கோயிலில் பிரதோஷ வழிபாடு
திருவானைக்கா கோயிலில் பிரதோஷ வழிபாடு...
திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் வியாழக்கிழமை மாலை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
இக்கோயிலில் காா்த்திகை மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் சுவாமி சந்நிதியின் எதிரே உள்ள பிரதோஷ நந்திக்கு பால், தயிா், தேன், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பிறகு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
திருப்பட்டூரில்...: மண்ணச்சநல்லூா் வட்டம் திருப்பட்டூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை பிரதோஷ விழா நடைபெற்றது.
இதை யொட்டி மூலவா் மற்றும் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.தொடா்ந்து உற்ஸவ மூா்த்தி சுவாமிகள் கோயிலை வலம் வந்தனா்.
இதேபோல மண்ணச்சநல்லூா் பூமிநாத சுவாமி கோயில், திருப்பைஞ்ஞீலி ஞீலி வனேஸ்வரா் கோயில், சமயபுரம் போஜீஸ்வரா் கோயில், திருவாசி மாற்றுரை வரதீஸ்வரா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.