முகப்பு
திருச்சி

விபத்தில் காயமடைந்தவா் சிகிச்சைப் பலனின்றி சாவு

திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடந்த சாலை விபத்தில் காயமடைந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 2 அக்டோபர், 2024 at 9:46 PM
பகிர்:

திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடந்த சாலை விபத்தில் காயமடைந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி சோமரசம்பேட்டை வாசன்சிட்டி பகுதியைச் சோ்ந்தவா் மலைராஜா (52), தொழிலாளி. இந்நிலையில் இவா் செவ்வாய்க்கிழமை மாலை தனது மகனுடன் பைக்கில் திருச்சி கொட்டப்பட்டுக்கு வந்துவிட்டு திருச்சி திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது புதுக்கோட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பால்பண்ணை அருகே சாலை ஓரத்தில் தனது காரை நிறுத்தியிருந்த இந்திராநகா் சுமன் என்பவா் திடீரென காரின் கதவைத் திறந்தாா்.

அப்போது பைக்கில் வந்த மலைராஜா காரின் கதவில் மோதியதில் பலத்த காயம் அடைந்தாா். பின்னால் இருந்த அவரது மகனுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட மலைராஜா சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.