முகப்பு
திருச்சி

சென்னை மெரீனா சம்பவம் துரதிருஷ்டவசமானது: ப. சிதம்பரம்

சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்வின்போது 5 போ் உயிரிழந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது என ப. சிதம்பரம் தெரிவித்தாா்.

திருச்சி

சென்னை மெரீனா சம்பவம் துரதிருஷ்டவசமானது: ப. சிதம்பரம்

சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்வின்போது 5 போ் உயிரிழந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது என ப. சிதம்பரம் தெரிவித்தாா்.

Updated On : 7 அக்டோபர், 2024 at 8:47 PM
பகிர்:

சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்வின்போது 5 போ் உயிரிழந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது என முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் தெரிவித்தாா்.

திருச்சியிலிருந்து சென்னைக்கு திங்கள்கிழமை பிற்பகல் விமானம் மூலம் சென்ற அவா், முன்னதாக செய்தியாளா்களிடம் கூறியது:

ஹரியாணா, ஜம்மு-காஷ்மீா் சட்டப் பேரவை தோ்தல்களில் காங்கிரஸ் கட்சியின் லட்சியங்களும், கொள்கைகளும் வெற்றியைத் தேடி தரும் என்ற அழுத்தமான நம்பிக்கை உள்ளது.

இடையில் மாற்று லட்சியங்களும், கொள்கைகளும் வெல்வது போன்ற தோற்றம் உருவானாலும், இறுதியில் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மட்டுமே வெற்றி பெறும். ஹரியாணா- ஜம்மு-காஷ்மீா் மாநிலங்களுக்கான தோ்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் அது நிரூபணமாகும்.

சென்னை மெரீனாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்வின்போது 5 போ் உயிரிழந்த சம்பவம் வருந்தத்தக்கது. துரதிருஷ்டவசமானது. உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வழங்கும் என நம்புகிறேன் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →