கொல்லப்பட்டியில் ரேஷன் கடை திறப்பு
கொல்லப்பட்டியியில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கொல்லப்பட்டியியில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
துறையூா் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொல்லப்பட்டியில் புதிதாகக் கட்டப்பட்ட ரேஷன் கடை எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமாா் திறந்துவைத்தாா். திருச்சி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் த. ராஜேந்திரன், துறையூா் ஒன்றியக் குழுத் தலைவா் சரண்யாமோகன்தாஸ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டுறவு சாா்-பதிவாளா் வினோத்குமாா், துறையூா் வட்ட வழங்கல் அலுவலா் குணசுந்தரி, சிங்களாந்தபுரம் கூட்டுறவுச் சங்க செயலா் மதியழகன், துறையூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் சிவ சரவணன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.