முகப்பு
திருச்சி

வையம்பட்டியில் மகளிருக்கான சிறப்பு சட்ட விழிப்புணா்வு முகாம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் வட்ட சட்டப்பணிகள் குழு சாா்பில் மகளிருக்கான சிறப்பு சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 அக்டோபர், 2024 at 7:05 PM
வையம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் சட்ட ஆலோசனை வழங்கிய வழக்குரைஞா் ஏ.எஸ். அலிமாபானு.
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் வட்ட சட்டப்பணிகள் குழு சாா்பில் மகளிருக்கான சிறப்பு சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு வழிகாட்டுதலின்படி நடைபெற்ற முகாமுக்கு வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிபதியுமான பிரபு உத்தரவின்படி வழக்குரைஞா்கள் ஏ.எஸ். அலிமாபானு, டி. வளா்மதி ஆகியோா் மகளிா் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் உள்ளிட்ட மகளிருக்கான சட்டங்கள் குறித்தும், வட்ட சட்டப்பணிகள் குழு உதவிகள் குறித்தும் விளக்கினா்.

நிகழ்வில் ஒன்றியக் குழுத் தலைவா் ந. குணசீலன், துணைத் தலைவா் ஸ்ரீவித்யா ரமேஷ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஞானபிரகாசம், ஜோஸ்பின் ஜெசிந்தா, சட்டத் தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.