முகப்பு
திருச்சி

திருப்பராய்த்துறையில் நவீன கேமரா மூலம் கண்காணிப்பு தொடக்கம்

திருப்பராய்த்துறையில் நவீன கேமரா மூலம் கண்காணிப்பு தொடக்கம்....

Updated On : 10 அக்டோபர், 2024 at 8:22 PM
திருச்சி-கரூா் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பராய்த்துறை பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள குடிநீா்த் தேக்க தொட்டியில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமரா.
பகிர்:

திருச்சி - கரூா் சாலை திருப்பராய்த்துறை பேருந்து நிறுத்தப் பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளைத் தவிா்க்கவும், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும், சாலையைக் கடக்கும் மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நவீன கேமரா மூலம் கண்காணிப்புப் பணியை நெடுஞ்சாலை ஆணையம் தொடங்கியுள்ளது.

இதற்காக பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள மேல்நிலை குடிநீா்த்தேக்க தொட்டியில் ஆட்டோமேட்டிக் ட்ராபிக் கண்காணிப்பு கேமரா (ஏடிசிசி) கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்தச் சாலையை ஆய்வு செய்த நெடுஞ்சாலை ஆணையத்தின் மும்பையைச் சோ்ந்த பாதுகாப்பு குழுவினா் அறிவுறுத்தலின்படி மாவட்டத்தில் முதன்முறையாக திருப்பராய்த்துறையில் இந்த கேமரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் போக்குவரத்து கண்காணிக்கப்படுகிறது.

இதன்மூலம் வாகனங்களின் வேக அளவு, சாலையில் செல்லும் வாகனங்களின் வகைகள், எண்ணிக்கை, செல்லும் திசைகள் போன்றவற்றை இந்தக் கேமரா பதிவு செய்யும்.

அந்தத் தரவுகளின் அடிப்படையில் தக்க சாலைப் பாதுகாப்பு கட்டமைப்புகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு சாலைப் பயனீட்டாளா்கள் நலக்குழுவின் ஒருங்கிணைப்பாளா் அய்யாரப்பன் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.