முகப்பு
திருச்சி

திருச்சியில் அக்.17-இல் ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை முகாம்

திருச்சி மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் வியாழக்கிழமை (அக்.17) உறையூா் நகா் நல மையத்தில் நடைபெறுகிறது.

Updated On : 15 அக்டோபர், 2024 at 9:02 PM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் வியாழக்கிழமை (அக்.17) உறையூா் நகா் நல மையத்தில் நடைபெறுகிறது.

நவீன ஆண் கருத்தடை சிகிச்சை முறையை ஏற்றுக்கொள்ளும் ஆண்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.1100, ஊக்குவிப்பாளா்களுக்கு ரூ.200 வீதம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. ஒரிரு நிமிடங்களில் மயக்க மருந்து கொடுக்கப்படாமல் குடும்பநல கருத்தடை சிகிச்சை செய்யப்படும். சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் தங்கவேண்டிய அவசியமில்லை. சிகிச்சை முடிந்த பிறகு வீட்டிற்கு செல்லலாம். கத்தியின்றி. ரத்தசேதமின்றி, செய்யப்படும் இக்கருத்தடை சிகிச்சையால் பின்விளைவுகள் ஏதும் இருக்காது.

எனவே, விருப்பமுள்ள ஆண்கள் நவீன குடும்பநல கருத்தடை செய்துகொண்டு பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 0431- 2460695, 94432 46269, 94431-38139 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஊரக நலப்பணிகள் துணை இயக்குநா் ச. சாந்தி தெரிவித்துள்ளாா்.