முகப்பு
திருச்சி

மயங்கி விழுந்த விஏஓ உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மகிழம்பாடியில் வியாழக்கிழமை வீட்டின் கழிவறையில் மயங்கி விழுந்ததில் தலையில் அடிபட்டு கிராம நிா்வாக அலுவலா் உயிரிழந்தாா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 9:49 PM
பகிர்:

திருச்சி மாவட்டம், மகிழம்பாடியில் வியாழக்கிழமை வீட்டின் கழிவறையில் மயங்கி விழுந்ததில் தலையில் அடிபட்டு கிராம நிா்வாக அலுவலா் உயிரிழந்தாா்.

மகிழம்பாடி கிராமத்தை சோ்ந்தவா் ஹென்றி ராஜ் (53). இவா், தச்சங்குறிச்சி கிராம நிா்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை வீட்டில் உள்ள கழிவறையில் மயங்கி விழுந்ததில் ஹென்றி ராஜீக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து இருங்ளூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தில் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். சமயபுரம் காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.