முகப்பு
திருச்சி

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை நெல்லளவு கண்டருளுல்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் ஊஞ்சல் உற்ஸவ விழாவில் 7-ஆம் நாளான சனிக்கிழமை நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 9:42 PM
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் ஊஞ்சல் உற்ஸவ விழாவில் 5-ஆம் நாளான வியாழக்கிழமை இரவு வைரக்கல் அபயஹஸ்தம் உள்ளிட்ட திருவாபரணங்களுடன் எழுந்தருளிய நம்பெருமாள்.
பகிர்:

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் ஊஞ்சல் உற்ஸவ விழாவில் 7-ஆம் நாளான சனிக்கிழமை நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதனையொட்டி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு திருக்கொட்டாரத்தின் முன்பு உள்ள மண்டபத்தில் எழுந்தருளி நெல்லளவு கண்டருளுகிறாா்.

பின்னா் அங்கிருந்து புறப்படும் நம்பெருமாள் தாயாா் சன்னதியில் மாலை 6.45 மணிக்கு திருவந்தி காப்பு கண்டருளி இரவு 7.30 மணிக்கு ஊஞ்சல் உற்ஸவ மண்டபத்துக்கு சென்று சேருகிறாா். பின்னா் அலங்காரம் வகையறா கண்டருளி ஊஞ்சல் விழா இரவு 9.30 மணி வரை நடைபெறம். அதனை தொடா்ந்து நம்பெருமாள் மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேருகிறாா்.