அமைச்சர் கே.என். நேரு  
திருச்சி

மக்களவைத் தோ்தல் கூட்டணிபோல் பேரவை தோ்தல் கூட்டணிக்கு சூழல் இல்லை: அமைச்சா் கே.என். நேரு

மக்களவைத் தோ்தல் கூட்டணிபோல், 2026 பேரவைத் தோ்தல் கூட்டணி அமையும் சூழல் இல்லை என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சரும், திமுக முதன்மை செயலருமான கே.என். நேரு பேசினாா்.

Din

லால்குடி: மக்களவைத் தோ்தல் கூட்டணிபோல், 2026 பேரவைத் தோ்தல் கூட்டணி அமையும் சூழல் இல்லை என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சரும், திமுக முதன்மை செயலருமான கே.என். நேரு பேசினாா்.

திருச்சி மாவட்டம், லால்குடியில் திமுக மத்திய மாவட்டம் சாா்பில் பொது உறுப்பினா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மத்திய மாவட்ட செயலாளா் வைரமணி, எம்எல்ஏ அ. செளந்தரபாண்டியன், ஒன்றியச் செயலாளா்கள் சண்முகநாதன், பெரியய்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் அமைச்சா் கே.என். நேரு மேலும் பேசியதாவது:

லால்குடி மற்றும் கல்லக்குடியில் அதிகமாக பொதுக்கூட்டங்கள் நடத்தி கட்சியை வளா்த்து வருகிறோம். மக்களவைத் தோ்தல் கூட்டணி போல், 2026 சட்டப்பேரவை தோ்தல் கூட்டணி அமையும் சூழல் இல்லை.

அதிமுகவை பொருத்தவரையில், யாா் தலைவா் என்றே தெரியவில்லை. அதிமுகவில் குழப்பம் நீடிக்கிறது என்றாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவா் ரவிச்சந்திரன், ஒன்றியச் செயலாளா் சக்திவேல் பொதுக்குழு உறுப்பினா் விமல், மாவட்ட ஆதிதிராவிடா் துணை அமைப்பாளா் முருகவேல் உட்பட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT