முகப்பு
திருச்சி

பல்கலை. அளவிலான பூப்பந்துப் போட்டி: ஜமால் முகமது கல்லூரி அணி சாம்பியன்

பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான பூப்பந்துப் போட்டியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 8:40 PM
போட்டியில் வென்ற மாணவா்களை புதன்கிழமை பாராட்டிய ஜமால் முகமது கல்லூரி நிா்வாகிகள்.
பகிர்:

பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான பூப்பந்துப் போட்டியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இணைவுப் பெற்ற திருச்சி, தஞ்சை மண்டலத்திற்குள்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான பூப்பந்துப் போட்டி புதுக்கோட்டை மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில் அண்மையில் 2 நாள்கள் நடைபெற்றன.

இதில் பல்வேறு கல்லூரி அணிகள் பங்கேற்ற நிலையில் போட்டிகள் நாக்-அவுட் மற்றும் லீக் முறையில் நடைபெற்றன.

இதில் காலிறுதியில் வென்ற திருச்சி செயின்ட் ஜோசப், ஜமால் முகமது, புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி, புதுகை மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரி ஆகிய 4 அணிகள் லீக் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றன.

லீக் போட்டிகளில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி செயின்ட் ஜோசப் கல்லூரியை 35-26, 35-25 என்ற புள்ளிகள் கணக்கிலும், புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியை 35-13, 35-8 என்ற புள்ளிகள் கணக்கிலும், கணேசா் கலை அறிவியல் கல்லூரியை 35- 15 35- 22 என்ற புள்ளிகள் கணக்கிலும் வென்று, முதலிடம் பிடித்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பூப்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி இரண்டாமிடத்தையும், புதுகை மேலைச்சிவபுரி கணேசா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மூன்றாமிடத்தையும் பிடித்தன.

இதில் முதலிடம் பிடித்த திருச்சி ஜமால் முகமது கல்லூரி வீரா்களை கல்லூரிச் செயலா் ஏ.கே. காஜா நஜீமுதீன், முதல்வா் டி.ஐ. ஜாா்ஜ் அமலரத்தினம், உடற்கல்வி இயக்குநா் பி.எஸ். ஷாஇன்ஷா ஆகியோா் புதன்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினா்.

முழு கட்டுரையைப் படிக்க →