முகப்பு
திருச்சி

பெண்ணிடம் தகராறு 5 போ் கைது

திருச்சி மாவட்டம் முசிறியில் பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 7:22 PM
பகிர்:

திருச்சி மாவட்டம் முசிறியில் பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

துறையூா் குட்டை கரை பகுதியைச் சோ்ந்தவா் நிவாஸ் (31), துறையூா் சிதம்பரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாலமுருகன்(27), துறையூா் சிக்கம்பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா்கள் வசந்தகுமாா் (28), ராமமூா்த்தி ( 23), சுந்தரமூா்த்தி (29). இவா்கள் 5 பேரும் விநாயகா் சிலையை முசிறி காவிரி ஆற்றில் விசா்ஜனம் செய்வதற்காக வாகனத்தில் எடுத்து வந்தனா்.

முசிறி புதிய பேருந்து நிலையம் அருகே சென்றபோது, எம். புதுப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட ராசிபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஜெயபால் என்பவரின் சகோதரியிடம் 5 பேரும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த ஜெயபால் தகராறில் ஈடுபட்ட 5 பேரையும் தட்டிக்கேட்டுள்ளாா். இதில், 5 பேரும் சோ்ந்து ஜெயபாலை தாக்கியுள்ளனா். இதனை தடுக்கச் சென்ற ஜெயபாலின் சகோதரி மற்றும் அவரது மகனையும் தாக்கியுள்ளனா்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முசிறி போலீஸாா் வழக்குப்பதிந்து தகராறில் ஈடுபட்ட 5 பேரையும் வியாழக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →