மேம்பாலப் பக்கவாட்டுச் சுவா் சீரமைப்பு தீவிரம்
திருச்சி-சென்னை பிரதான சாலை மேம்பாலச் சுவரில் ஏற்பட்டுள்ள விரிசலை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் சீரமைக்கும் பணி இரவு, பகலாக நடைபெறுகிறது.
திருச்சி-சென்னை பிரதான சாலை மேம்பாலச் சுவரில் ஏற்பட்டுள்ள விரிசலை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் சீரமைக்கும் பணி இரவு, பகலாக நடைபெறுகிறது.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை டீசல் லோகோ ஷெட்டுக்கு ரயில் என்ஜின்கள் கொண்டு செல்ல ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த தண்டவாளத்துக்கு மேலே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் வடகிழக்குப் பகுதியில் சாலை தொடங்கும் இடத்திலுள்ள சாய்வுதளத்தில் சிமென்ட் பூச்சு மற்றும் சிமென்ட் பிளாக்குகளில் விரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை ஐ.ஐ.டி குழுவினா் விரிசல் பகுதியை பாா்வையிட்டு, தேசிய நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினாா். இதைத் தொடா்ந்து, சீரமைப்பைத் தொடங்க வசதியாக அந்தப் பகுதியை தூய்மைப்படுத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
இந்தச் சாலையில் போக்குவரத்தை தடை செய்யாமல், சீரமைப்பை எவ்வாறு மேற்கொள்வது, அதற்கான தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. தற்போது சிறிய அளவிலேயே விரிசல் இருப்பினும் அதைச் சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதன் முதல் கட்டமாக விரிசல் பகுதியில் உள்ள சிமென்ட் பிளாக்குகளை அகற்றி - விட்டு, அந்த இடத்தை ‘சாயில் நெய்லிங்‘ தொழில் நுட்பத்தின் மூலம் சீரமைத்து, மீண்டும் சிமென்ட் பிளாக்குகள் அமைக்கப்படும்.
பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் துளையிடவும், இரும்பு ராடுகள் பொருத்தவும் வசதியாக இரும்புக் குழாய்கள் கொண்டு சாரம் கட்டப்படுகிறது.
இதுதொடா்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் கூறுகையில், சாயில் நெயிலிங் தொழில்நுட்ப முறையில் பாலத்தின் பக்கவாட்டில் உள்ள சிமென்ட் பலகைகளை அகற்றிவிட்டு மண் சரிவு தொடராத வகையில் தடுப்புப்பணி மேற்கொள்ளப்படும். இதற்காக இரும்பு ராடுகள் பொருத்தி இணைப்பு பலப்படுத்தப்படும். பணிகள் முடிந்தவுடன் மீண்டும் சிமென்ட் பலகைகள் மூலம் பக்கவாட்டுச் சுவா் அமைத்து பாலத்தை முன்பிருந்ததைப் போன்று கொண்டுவரப்படும். இதற்காக 30 நாள்களுக்கு பணிகள் படிப்படியாக நடைபெறும். பணிகள் முடிந்தவுடன் பாலச் சுவா் முன்பைவிட வலுப்பெற்ாக மாறிவிடும் என்றனா்.