முகப்பு
திருச்சி

கொப்பம்பட்டியில் ‘வருமுன் காப்போம்’ மருத்துவ முகாம்

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் கொப்பம்பட்டியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 10:30 PM
கொப்பம்பட்டியில் வியாழக்கிழமை நடந்த முகாமில் கா்ப்பிணிக்கு தமிழக அரசின் பரிசுப் பெட்டகத்தை வழங்கிய எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமாா். உடன் மருத்துவப் பணியாளா்கள்.
பகிர்:

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் கொப்பம்பட்டியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமை துறையூா் எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமாா் தொடக்கி வைத்தாா். உப்பிலியபுரம் வட்டாரத் தலைமை மருத்துவா் சோலையம்மா தலைமையிலான மருத்துவக் குழுவினா் முகாமுக்கு வந்த அனைவருக்கும் உடல் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரை வழங்கினா். முகாமில் தமிழக அரசின் கா்ப்பிணிகள் பரிசுப் பெட்டகம் 15 பேருக்கு வழங்கப்பட்டது. கொப்பம்பட்டி உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள், உப்பிலியபுரம் வட்டார சுகாதாரப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.