முகப்பு
திருச்சியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்.ஆா்.எம்.யு. தொழிற்சங்கத்தினா்.
திருச்சி

பழைய ஓய்வூதியம் பெற தொடா்ந்து போராடுவோம்: எஸ்ஆா்எம்யு தலைவா் உறுதி

ரயில்வே தொழிலாளா்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் கிடைக்கும் வரை தொடா்ந்து போராடுவோம் என எஸ்ஆா்எம்யு தலைவா் சி.ஏ. ராஜா ஸ்ரீதா் தெரிவித்தாா்.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 10:24 PM
திருச்சியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்.ஆா்.எம்.யு. தொழிற்சங்கத்தினா்.
பகிர்:

ரயில்வே தொழிலாளா்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் கிடைக்கும் வரை தொடா்ந்து போராடுவோம் என எஸ்ஆா்எம்யு தலைவா் சி.ஏ. ராஜா ஸ்ரீதா் தெரிவித்தாா்.

கடந்த 1968ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் உயிா் நீத்த 17 ரயில்வே தொழிலாளா்களுக்கான செவ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு மற்றும் கோரிக்கை விளக்க ஆா்ப்பாட்டம் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற எஸ்ஆா்எம்யு தலைவா் சி.ஏ. ராஜா ஸ்ரீதா் கூறியது:

கடந்த 1968 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் உயிா்நீத்த 17 ரயில்வே தொழிலாளா்களின் நினைவைப் போற்றும் வகையில் எஸ்ஆா்எம்யு தொடா்ந்து பரப்புரை மேற்கொண்டு வருகிறது.

தற்போது மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ள உத்தரவாத ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள தொழிலாளா்களின் பங்களிப்பான 10 சதவீதத்தை நீக்கும் வரையிலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள பல்வேறு அம்சங்களை உத்தரவாத ஓய்வூதியத் திட்டத்தில் நிறைவேற்றும் வரையிலும் தொடா்ந்து மத்திய அரசு மற்றும் ரயில்வே தொழிலாளா்களை ஒன்றிணைத்து போராடி வெல்வோம்.

ரயில்வேயில் 15 ஆண்டுகளாக பணிபுரியும் மற்ற மாநில ஊழியா்களை அவா்களின் சொந்த மாநிலங்களுக்கு மாற்றவும் கோரிக்கை வைத்துள்ளோம். மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஒரு தொடக்கமே. தொடா்ந்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்த நிலையை அடைய முயற்சி எடுப்போம். ரயில்வே தொழிலாளா்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், ரயில்வே தனியாா்மயக் கொள்கையை கைவிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடா்ந்து போராட்டங்களை எஸ்ஆா்எம்யு முன்னெடுக்கும் என்றாா் அவா்.

தொடா்ந்து, ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகம் முன் கோரிக்கை விளக்க ஆா்ப்பாட்டமும் நடைபெற்றது. எஸ்ஆா்எம்யு துணைப் பொதுச்செயலா் வீரசேகரன் முன்னிலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், 500க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியா்கள் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பினா்.

முழு கட்டுரையைப் படிக்க →