சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அக்.3-இல் நவராத்திரி விழா தொடக்கம்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா அக்.3-ஆம் தேதி தொடங்குகிறது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா அக்.3-ஆம் தேதி தொடங்குகிறது.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நிகழாண்டு நவராத்திரி விழா அக்.3-ஆம் தேதி தொடங்கி அக்.11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அக்.12-ஆம் தேதி விஜயதசமியன்று அம்பு போடுதல் நிகழ்வும் நடைபெறும்.
நவராத்திரி உற்ஸவத்தின் போது உற்ஸவ அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் நவராத்திரி மண்டபத்தில் சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி இளங்கோவன், கோயில் இணை ஆணையா் அ.இரா.பிரகாஷ், அறங்காவலா்கள் பி.பிச்சை மணி, இரா.சுகந்தி ராஜசேகா், சேது.லட்சுமணன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.