முகப்பு
திருச்சி

மருதூா் ஊராட்சியில் ‘வருமுன் காப்போம்’ மருத்துவ முகாம்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள மருதூா் ஊராட்சியில் தமிழக அரசின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 10:53 PM
பகிர்:

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள மருதூா் ஊராட்சியில் தமிழக அரசின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மருதூா் ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவா் கௌசல்யா அசோகன் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு உறுப்பினா் தேவா முன்னிலை வகித்தாா். லால்குடி சட்டப்பேரவை உறுப்பினா் செளந்தரபாண்டியன் முகாமை தொடக்கி வைத்தாா். முகாமில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் செல்வநாயகம் தலைமையிலான மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கினா்.

முகாமில் 728 பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனா். முன்னதாக வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் மதிவானன் வரவேற்றாா். நிறைவாக சுகாதர ஆய்வாளா் அன்பரசன் நன்றி கூறினாா்.