முசிறியில் இருசக்கர வாகனத்தை திருடியதாக 2 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
முசிறி அருகேயுள்ள அழிஞ்சிக்குத்துள்ளத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் சுரேஷ் (36). கடந்த 8-ஆம் தேதி முசிறி பரிசல் துறை காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள அழகுநாச்சியம்மன் கோயிலின் முன் நிறுத்தியிருந்த இவரின் இருசக்கர வாகனம் திருடுபோனது. புகாரின்பேரில் முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இந்நிலையில், முசிறி காவிரி பெரியாா் பாலம் பகுதியில் போலீஸாா் புதன்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞா்களிடம் விசாரித்தனா்.
அவா்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதையடுத்து, இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா்கள் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், அரசகுலம் பகுதியைச் சோ்ந்த முத்துகுமாா் மகன் முத்து நாகராஜன் (29), பழனிவேல் மகன் பாரதி (26) என்பதும், இவா்கள் இருவரும் சுரேஷின் இருசக்கர வாகனத்தை திருடியதும் தெரியவந்தது. தொடா்ந்து,
இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து போலீஸாா் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.