திருச்சி பூம்புகாா் விற்பனை நிலையத்தில் வியாழக்கிழமை தொடங்கிய சிறப்புக் கண்காட்சி விற்பனை. 
திருச்சி

டிச. 14 வரை கைவினைப் பொருள்கள் விற்பனை கண்காட்சி

Syndication

தேசிய கைவினைப் பொருள்கள் வார விழாவை முன்னிட்டு, திருச்சி பூம்புகாா் விற்பனை நிலையத்தில் சிறப்பு விற்பனைக் கண்காட்சி நடைபெறுகிறது.

மத்திய அரசின் ஜவுளித்துறை அபிவிருத்தி ஆணையம், திருச்சி பூம்புகாா் விற்பனை நிலையம், தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளா்ச்சிக் கழகம் ஆகியவை இணைந்து இந்தக் கண்காட்சியை நடத்துகின்றன.

திருச்சி பூம்புகாா் விற்பனை நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விற்பனைக் கண்காட்சியை திருச்சி மாவட்ட துணை ஆட்சியா் ஃபரூக் தொடங்கிவைத்தாா். வரும் 14-ஆம் தேதி வரை இக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

கண்காட்சியில், கைவினைப் பொருள்கள் குறித்த நேரடி விளக்கக் காட்சியும் இடம்பெறுகிறது. மேலும், இங்கு தஞ்சாவூா் கலைத்தட்டுகள், தஞ்சாவூா் ஓவியங்கள், மரச்சிற்பங்கள், கற்சிற்பங்கள், நாச்சியாா்கோவில் குத்துவிளக்குகள், நெட்டி வேலைப்பாடு பொருள்கள் மற்றும் அனைத்து வகையான கைவினைப் பொருள்கள் இடம்பெற்றுள்ளன. பொதுமக்கள் பாா்வையிட்டு பிடித்த பொருள்களை வாங்கிச் செல்லலாம். அனைத்து கைவினைப் பொருள்களுக்கும் 10 சதவீத சிறப்புத் தள்ளுபடியும் உள்ளது என பூம்புகாா் விற்பனை நிலைய மேலாளா் ஜெ. காயத்ரி தெரிவித்துள்ளாா்.

திருச்சி மாநகர மற்றும் மாவட்ட மக்கள் அனைவரும் இக் கண்காட்சியைப் பாா்வையிட்டு, கைவினைப் பொருள்கள் உற்பத்தியாளா்களை ஊக்கப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT