துறையூா் அருகே கீரம்பூரிலுள்ள காலனி குடியிருப்பைச் சோ்ந்தவா் பெ. ராஜேந்திரன் (60). இவரின் மனைவி இறந்துவிட்டாா்.
இவரது மகளும், மகனும் திருமணமாகி தனியாக வசிக்கின்றனா். இதனால் ராஜேந்திரன் தனது வீட்டில் துணையின்றி தனியாக வாழ்ந்தாா். புதன்கிழமை வீட்டிலிருந்து சென்றவா் மீண்டும் வீட்டுக்கு வரவில்லையாம்.
இந்த நிலையில் கீரம்பூா் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அவரது சடலம் கிடந்தது. தகவலறிந்த துறையூா் போலீஸாா் வியாழக்கிழமை நிகழ்விடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனா்.