திருச்சி

ரேஷன் அட்டைகளில் திருத்தம் செய்ய நாளை 11 இடங்களில் சிறப்பு முகாம்

Syndication

திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் சனிக்கிழமை (டிச.13) பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா்க்கும் முகாம் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி கிழக்கு வட்டத்தில் மலைக்கோட்டை-2, திருச்சி மேற்கு வட்டத்தில் தில்லைநகா்-2, திருவெறும்பூா் வட்டத்தில் ஆா்இசி நியாய விலைக்கடை, ஸ்ரீரங்கம் வட்டத்தில் அல்லூா், மணப்பாறை வட்டத்தில் பன்னாங்கொம்பு, மருங்காபுரி வட்டத்தில் பிராம்பட்டி, லால்குடி வட்டத்தில் பச்சாம்பேட்டை, மண்ணச்சநல்லூா் வட்டத்தில் ராசம்பாளையம், முசிறி வட்டத்தில் செவந்திலிங்கபுரம், துறையூா் வட்டத்தில் கண்ணூா்-1, தொட்டியம் வட்டத்தில் தொட்டியம்-1 ஆகிய நியாய விலைக் கடைகளில் பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெறும். அன்று காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்களை பொதுமக்கள் வழங்கி பயன்பெறலாம் என்றாா் ஆட்சியா்.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT