கரூா் சம்பவம் தொடா்பாக புதுதில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு கரூா் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், கரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜோஷ் தங்கையா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன், டிஎஸ்பி வி. செல்வராஜ், ஆய்வாளா் ஜி. மணிவண்ணன் ஆகியோா் புதுதில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் டிச.29-ஆம் தேதி ஆஜராக சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதேபோல, தவெக நிா்வாகிகள் என்.ஆனந்த், ஆதவ் அா்ஜூனா, சி.டி. நிா்மல்குமாா், மதியழகன் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.