திருச்சி மாவட்டம், தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பாஜகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொட்டியம் வட்டாட்சியரகம் அருகே புதன்கிழமை இண்டி கூட்டணி கட்சியினா் சாா்பில் முசிறி எம்எல்ஏ ந. தியாகராஜன் தலைமையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டதின் பெயா் மாற்றம் மற்றும் அத்திட்டத்தில் மேலும் சில மாற்றம் செய்த மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், நூறு நாள் வேலைத்திட்ட பணியாளா்கள் பெருமளவில் கலந்து கொள்ள தொட்டியம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து தொட்டியம் ஊராட்சி அலுவலகம் முன்பாக திருச்சி புகா் மாவட்டத் தலைவா் அஞ்சாநெஞ்சன் தலைமையில் அனுமதி அளித்த அரசு அலுவலா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் பாஜகவினா் திரளாக கலந்து கொண்டனா்.