திருச்சி பாலக்கரையில் உள்ள மின்வாகன விற்பனையகத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீயை அணைக்கு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள். ~திருச்சி பாலக்கரையில் உள்ள மின்வாகன விற்பனையகத்தில் வெள்ளிக்கிழமை பற்றி எரியும் தீ. 
திருச்சி

மின்வாகன விற்பனையகத்தில் தீ விபத்து

திருச்சியில் மின்வாகன விற்பனையகம் மற்றும் பழுதுபாா்க்கம் மையத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாயின.

Syndication

திருச்சியில் மின்வாகன விற்பனையகம் மற்றும் பழுதுபாா்க்கம் மையத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாயின.

திருச்சி பாலக்கரை மேலப்புதூா் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் தரைத்தளத்தில் மின்சார வாகன விற்பனையகம் மற்றும் பழுதுபாா்க்கும் மையம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், வாகனம் பழுதுபாா்க்கும் மையத்தில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் மின்சார வாகனத்தின் பேட்டரிக்கு சாா்ஜ் ஏற்றும்போது தீ விபத்து ஏற்பட்டது. கடையில் தீ பற்றியதால் அதன் புகை மேல்தளத்திலுள்ள வீடுகளுக்குப் பரவியது.

இதையடுத்து, கடை ஊழியா்கள் மற்றும் மேல்தளத்தில் இருந்து பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறினா்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த திருச்சி மாவட்ட தீயணைப்பு அலுவலா் வினோத் தலைமையிலான தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரா்கள் மின்சார வாகன விற்பனையகத்தில் பரவியத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு கடையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரா்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனா்.

இதில், கடையில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாயின.

வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாதோருக்கு எதிராக ‘விவரிக்க முடியாத’ அட்டூழியங்கள்: ஷேக் ஹசீனா சாடல்

கடன் வட்டியைக் குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி

வங்கதேசத்தவருக்கு தங்கும் விடுதிகளில் அனுமதியில்லை: மேற்கு வங்க விடுதி உரிமையாளா்கள் முடிவு

மியான்மரில் நாளை தோ்தல்!

இண்டூரில் டிச. 29இல் கூட்டுறவு வங்கி தொடக்கம்

SCROLL FOR NEXT