அருப்புக்கோட்டை வேளாண்மை திருவிழாவுக்கு திருச்சி விவசாயிகளை அழைத்து செல்ல ஏற்பாடு
அருப்புக்கோட்டையில் நடைபெறும் மண்டல அளவிலான வேளாண்மை திருவிழாவுக்கு, திருச்சி மாவட்ட விவசாயிகளை அழைத்துச் செல்ல சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடா்பாக, நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் சி. ராஜா பாபு கூறியதாவது: விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், வருகிற ஜன.4, 5 தேதிகளில், ‘பருவநிலை மாற்றமும் வேளாண் உற்பத்தியும்’ என்ற தலைப்பில் மண்டல அளவிலான வேளாண்மை திருவிழா, கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த மண்டல அளவிலான வேளாண்மை திருவிழாவுக்கு, விவசாயிகளை அழைத்துச் செல்ல வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கூடுதல் விவரங்களுக்கு0431-2962854, 81225-86689, 94438-12730, 90805-40412, 91717-17832 என்ற தொலைபேசி எண்களில் அலுவலக நேரத்தில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
Advertisement