அய்யாற்றின் குறுக்கே பாலம் அமைக்க துறையூா் எம்எல்ஏ கோரிக்கை
துறையூா் அருகே அய்யாற்றின் குறுக்கே பாலம் அமைத்து தருமாறு எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமாா் சட்டப்பேரவை கூட்டத்தில் அண்மையில் கோரினாா்.
துறையூா் அருகே அய்யாற்றின் குறுக்கே பாலம் அமைத்து தருமாறு எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமாா் சட்டப்பேரவை கூட்டத்தில் அண்மையில் கோரினாா்.
வெங்கடேசபுரம், கொட்டையூா், கருப்பம்பட்டி, கரட்டூா் வழியாக விசாலாட்சி அம்பாள் சமுத்திரம் செல்லும் கிராம சாலை அப்பகுதி மக்களின் தேவை கருதி நபாா்டு சாலையாக மேம்படுத்தப்பட்டது. அய்யாறு குறுக்கே பாலம் அமைத்து தரவேண்டும் என எம்எல்ஏ சட்டப்பேரவையில் கோரினாா். இதற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு தமிழகத்தில் 67 இடங்களில் பாலங்கள் கட்ட நிதித்துறை செயலகத்திடம் நிதி கோரியுள்ளோம். நிதித்துறை ஒத்திசைவுவுடன் முன்னுரிமை அடிப்படையில் அய்யாற்றில் பாலம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.