முகப்பு
திருச்சி

ஆசிரியா் இயக்கங்களின் முன்னோடி எல். கோபாலகிருஷ்ணன் காலமானாா்

ஆசிரியா் இயக்கங்களின் முன்னோடி எல். கோபாலகிருஷ்ணன் (102) செவ்வாய்க்கிழமை இரவு உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் காலமானாா்.

Updated On : 22 ஜனவரி, 2025 at 11:28 PM
எல். கோபாலகிருஷ்ணன் .
பகிர்:

ஆசிரியா் இயக்கங்களின் முன்னோடி எல். கோபாலகிருஷ்ணன் (102) செவ்வாய்க்கிழமை இரவு உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் காலமானாா்.

வடமதுரையில் பிறந்த இவா் கடந்த 1945ஆம் ஆண்டு ஆரம்பப் பள்ளி ஆசிரியராக மதுரையில் தனது பணியைத் தொடங்கியவா். மாா்க்சிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றியவா். ஆரம்பப் பள்ளி ஆசிரியா் சம்மேளனம், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி உள்ளிட்ட ஆசிரியா் இயக்கங்களில் பங்கெடுத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி, சிறை சென்றவா். ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் கூட்டமைப்பை தமிழக அளவிலும், இந்திய அளவிலும் முன்னெடுக்க முன்னின்று பணியாற்றியவா். மதுரையில் ஆசிரியா்களுக்கான இதழான புதிய ஆசிரியன் என்னும் மாத இதழின் தொடக்கக் கால ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் இருந்தவா்.

இவருக்கு 4 மகன்கள், 2 மகள்கள், பேரன், பேத்திகள் உள்ள நிலையில் திருச்சி குமரன் நகரில் வசிக்கும் மூத்த மகளான மாா்க்சிஸ்ட் கட்சியைச் சோ்ந்த ஜி. விஜயலட்சுமியின் பராமரிப்பில் கடந்த 7 ஆண்டுகளாக இருந்தாா்.

குமரன் நகா் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த இவரது உடலுக்கு மாா்க்சிஸ்ட் கட்சியின் நிா்வாகிகள், ஆசிரியா் இயக்கங்களின் நிா்வாகிகள் பலா் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

உடல் தானம்: பின்னா் பிற்பகலில் அவரது உடல் திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. தொடா்புக்கு: 94438-13679.

முழு கட்டுரையைப் படிக்க →