முகப்பு
திருச்சி

துறையூரில் பருத்தி பொது ஏலம் ரூ. 1.24 கோடிக்கு விற்பனை

துறையூரிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற பருத்தி பொது ஏலத்தில் ரூ. 1.24 கோடிக்கு பருத்தி விற்கப்பட்டது.

Updated On : 23 ஜனவரி, 2025 at 9:43 PM
பகிர்:

துறையூரிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற பருத்தி பொது ஏலத்தில் ரூ. 1.24 கோடிக்கு பருத்தி விற்கப்பட்டது.

திருச்சி விற்பனைக் குழு செயலா் சொா்ணபாரதி தலைமையில் பருத்தி பொது ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

துறையூா் பகுதியைச் சோ்ந்த பருத்தி விவசாயிகள் உற்பத்தி செய்த பருத்தியை பெரம்பலூா், கொங்கனாபுரம், பண்ருட்டி, மகுடன்சாவடி, அன்னூா், நாமக்கல், பெரகம்பி, கும்பகோணம், செம்பனாா்கோவில், விழுப்புரம், கரூா் பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் 23 போ் ஏலம் கோரினா். இதில் ஒரு குவிண்டால் பருத்தியை குறைந்த பட்சமாக ரூ. 6,356-க்கும், அதிகபட்சமாக ரூ. 7,799-க்கும் ஏலம் கேட்கப்பட்டது. நிறைவில் 1756.26 குவிண்டால் பருத்தி ரூ. 1,24,05,231-க்கு விற்பனையானது.

முழு கட்டுரையைப் படிக்க →