திருச்சி: திருச்சியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
திருச்சி செந்தண்ணீா்புரம் முத்துமணி டவுனைச் சோ்ந்தவா் டி. இறையனாா் (75). வெள்ளிக்கிழமை இவா் தனது மிதிவண்டியில் அருகே உள்ள விஸ்வாஸ் நகா் பகுதியில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியே அதிவேகமாக சென்ற நான்கு சக்கர வாகனம் அவரது மிதிவண்டியின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் இறையனாா் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தாா். அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இதில் சிகிச்சை பலனின்றி இறையனாா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து , திருச்சி மாநகரப் போக்குவரத்து புலனாய்வு வடக்குப்பிரிவு போலீசாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.