தொட்டியப்பட்டி பாம்பாளம்மன் திருவிழா
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அருகே தொட்டியப்பட்டி பாம்பாளம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கியது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அருகே தொட்டியப்பட்டி பாம்பாளம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கியது.
2 நாள் விழாவையொட்டி உற்ஸவ மூா்த்தியானது அருகிலுள்ள புல்லூரணி தென்கரைக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. உறுமி மேளத்துடன் நாயக்கா் இன மக்களில் தேவராட்டம், கரகம் அருள் சக்தியுடன் உயிரூட்டல் நிகழ்வுகள் நடைபெற்றன. தொடா்ந்து பல லட்சம் மதிப்பில் வாணவேடிக்கை நடைபெற்றது.
தொடா்ந்து மங்கல வாத்தியம், தாரை தப்பட்டைகள் முழங்க கரகம் பாலித்து அம்பாள் அருள் சக்தியுடன் ஆலயம் வந்தடைதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின் ஆலய வளாகத்தில் பொங்கல் வைத்தும், அடி விழுந்தும்(அங்கப்பிரதட்சணம்), ஆடு - கோழி பலியிடுதல், மாவிளக்கு, குழந்தை வரம் பெற்ற கரும்புத்தொட்டில் என பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனா். திருவிழாவில் திரளான பொதுமக்கள் சாமி தரிசனம் பெற்றனா்.