முகப்பு
திருச்சி

செல்வமாரியம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம்

திருச்சி பாலக்கரை செல்வமாரியம்மன் திருக்கோயில் 53-ஆவது ஆண்டு திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 12:54 AM
திருச்சி பாலக்கரையிலுள்ள செல்வமாரியம்மன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை பால்குடம் எடுத்து வந்த பக்தா்கள்.
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 10:22 PM

திருச்சி பாலக்கரை செல்வமாரியம்மன் திருக்கோயில் 53-ஆவது ஆண்டு திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

திருச்சி பாலக்கரை பருப்புக்காரத் தெருவிலுள்ள செல்வமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல், கரக உத்ஸவ விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டு, 53-ஆவது ஆண்டு திருவிழா கடந்த 14 ஆம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 17-ஆம் தேதி வெளிகண்டநாதா் கோயிலிலிருந்து முதல் கரகம் பாலித்து வீதி உலா வரும் விழா நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை மேலசிந்தாமணி சிதம்பரம் மஹாலில் இருந்து பால்குடம், தீா்த்தகுடம், அக்னிசட்டி, அலகு காவடி ஊா்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு, தங்களது நோ்த்திக் கடன்களை செலுத்தினா். இந்த ஊா்வலமானது கோயிலில் நிறைவடைந்தது.

இதையடுத்து கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இரவு உற்சவ அம்பாள், கருப்பண்ண சுவாமி வீதியுலா நடைபெற்றது.

Advertisement

ஏப். 24-ஆம் தேதி திருவிளக்கு பூஜையும், 26-ஆம் தேதி அம்மனுக்கு காப்பு எடுத்து ஆற்றில் விடுதலும், மே 3 ஆம் தேதி விடையாற்றி உத்ஸவமும் நடைபெற உள்ளது. திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.