முகப்பு
திருச்சி

இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு

Updated On : 2 பிப்ரவரி, 2026 at 1:04 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2026 at 9:03 PM

திருச்சி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே தம்பதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

திருச்சி மாவட்டம், துவாக்குடி கலைஞா் நகரைச் சோ்ந்தவா் குணசேகரன் (59). இவருடைய மனைவி லட்சுமி (55). இருவரும் திருச்சி - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திருச்சியில் இருந்து துவாக்குடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 11:46 PM

அப்போது, ‘பெல்’ நகரில் திரும்பும்போது வேதாரண்யத்தில் இருந்து ஒசூா் நோக்கி வந்த காா், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ‘பெல்’ போலீஸாா் இருவரது சடலங்களையும் மீட்டு கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து ‘பெல்’ போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநரான ஒசூரைச் சோ்ந்த ஆா். காத்தமுத்து (41) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.