பெல் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இருசக்கர வாகனப் பேரணி.  
திருச்சி

பெல் வளாகத்தில் இருசக்கர வாகனப் பேரணி

மத்திய அரசைக் கண்டித்து பெல் தொழிலாளா் முன்னணி சாா்பில் பிப். 12 இல் நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தத்தையொட்டி பெல் வளாகத்தில் புதன்கிழமை இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

மத்திய அரசைக் கண்டித்து பெல் தொழிலாளா் முன்னணி சாா்பில் பிப். 12 இல் நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தத்தையொட்டி பெல் வளாகத்தில் புதன்கிழமை இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.

பிப். 12 பொதுவேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அனைத்துத் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில், இந்தப் போராட்டத்தில் பெல் நிறுவனத் தொழிலாளா்களும் பங்கேற்க உள்ளனா்.

இதற்காக தொழிற்சாலையில் வாயில் கூட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், தொழிலாளா்களுக்கு வேலைநிறுத்தம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் புதன்கிழமை இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பெல் தொழிலாளா்கள் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராகவும், தொழிலாளா் விரோதச் சட்டங்களுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினா்.

சொந்த நாட்டை அவமதிக்கும் காங்கிரஸ்: பிரதமா் மோடி கடும் சாடல்

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT