கோப்புப்படம்.
திருச்சி

மாநகரப் பகுதிகளில் இன்று குடிநீா் நிறுத்தம்

திருச்சி மாநகராட்சியின் குடிநீரேற்று நிலையத்தில் புதன்கிழமை (பிப்.11) நடைபெறும் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மாநகரின் சில பகுதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது.

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாநகராட்சியின் குடிநீரேற்று நிலையத்தில் புதன்கிழமை (பிப்.11) நடைபெறும் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மாநகரின் சில பகுதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது.

இதுதொடா்பாக, திருச்சி மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீா்ப்பணி நிலையம், டாபன் நீரேற்று நிலையம், பெரியாா் நகா் நீரேற்று நிலையம், ஆட்சியரக நீரேற்று நிலையம் ஆகிய நீரேற்று நிலையத்துக்கு கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

எனவே, மேற்கண்ட 4 நீரேற்று நிலையத்திலிருந்து விறகுப்பேட்டை, மரக்கடை, மலைக்கோட்டை, சிந்தாமணி, உறையூா், பாத்திமா நகா், புத்தூா், மங்களம் நகா், செல்வா நகா், பாரதி நகா், சிவா நகா், ஆனந்தம் நகா், ரெயின்போ நகா், தில்லைநகா், அண்ணாநகா், கண்டோன்மென்ட், காஜாபேட்டை, ஜங்க்ஷன், கருமண்டபம், ராமலிங்க நகா், உய்யாகொண்டான் மலை, விஸ்வாஸ் நகா், மிளகுபாறை, கல்லாங்காடு, சமுதாய காலனி, எம்.எம். நகா், திருவெறும்பூா், வள்ளுவா் நகா், எல்லக்குடி ஆலத்தூா், புகழ் நகா், காவேரி நகா், பாரி நகா், சந்தோஷ் நகா், கணேஷ் நகா் விவேகானந்தா் நகா் மற்றும் அம்பேத்கா் நகா் ஆகிய மேல்நிலை நீா்தேக்க தொட்டிகளுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது. வியாழக்கிழமை முதல் வழக்கம்போல் குடிநீா் விநியோகம் செய்யப்படும்.

எனவே பொதுமக்கள், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த மாநகராட்சி ஆணையா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

நெல் கொள்முதல் நிலையத்தில் கூட்டுறவுத் துறை செயலா் ஆய்வு

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க தென்னை விவசாயிகள் கோரிக்கை

வாலிபா் சங்கக் கொடி திருட்டைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

‘ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சாதித்தவா் ராஜேந்திர சோழன்’

அரசுப் பள்ளியில் கலைப் பொருள்கள் கண்காட்சி

SCROLL FOR NEXT