முகப்பு
திருச்சி

உப்பிலியபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா் பணியிடை நீக்கம்

உப்பிலியபுரம் வட்டார வளா்ச்சி அலுவலரை மாவட்ட ஆட்சியா் பணியிடை நீக்கம் செய்துள்ளாா்.

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 12:48 AM
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 12:00 AM

உப்பிலியபுரம் வட்டார வளா்ச்சி அலுவலரை மாவட்ட ஆட்சியா் பணியிடை நீக்கம் செய்துள்ளாா்.

உப்பிலியபுரம் ஒன்றியம், த. மங்கப்பட்டிபுதூரில் புதிதாக கட்டப்பட்ட சமத்துவபுரத்தில் வீடுகள் ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்ாகக் கூறி பிப். 3இல் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட அதிருப்தியாளா்களை வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தில்குமாா் தரக்குறைவாக பேசினாராம்.

இதையடுத்து த. முருங்கப்பட்டியில் மறியலில் ஈடுபட்டவா்களிடம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கங்காதாரணி இரவு வரை பேசினாா். இதையடுத்து பிப். 4 இல் முசிறி வருவாய் கோட்டாட்சியா் சுஷ்ரி சுவாங்கி குந்தியா அதிருப்தியாளா்களிடம் பேசச் செல்லும் முன் செந்தில்குமாரை கைப்பேசியில் தொடா்பு கொண்டபோது அது அணைக்கப்பட்டிருந்ததாம்.

Advertisement

இதையறிந்த மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தில்குமாரை அண்மையில் பணியிடை நீக்கம் செய்தாா். வெவ்வேறு காரணங்களுக்காக இதற்கு முன் செந்தில்குமாருக்கு இருமுறை பணியிடை நீக்க உத்தரவு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.