முகப்பு
திருச்சி

பொறியியல் பணிகள்: திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில் இன்று பகுதியாக ரத்து

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 4:09 AM
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 8:02 PM

குத்தாலம் அருகே அருகே நடைபெறும் பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில் வெள்ளிக்கிழமை (பிப். 13) கும்பகோணம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.

திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு தினசரி காலை 6.05 மணிக்கு திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வண்டி எண்: 56700) இயக்கப்படுகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே பொறியியல் பணிகள் நடைபெறவுள்ளதால் மேற்கண்ட ரயில் பிப்ரவரி 13 (வெள்ளிக்கிழமை), பிப்ரவரி 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கும்பகோணம் வரை மட்டுமே இயக்கப்படும்.

கும்பகோணத்தில் இருந்து புறப்படும் செங்கோட்டை ரயில்:

Advertisement

இதேபோல, மயிலாடுதுறையில் இருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கு இயக்கப்படும் மயிலாடுதுறை - செங்கோட்டை பயணிகள் விரைவு ரயில் (வண்டி எண்: 16847) பிப்ரவரி 13 (வெள்ளிக்கிழமை), பிப்ரவரி 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறைக்குப் பதிலாக கும்பகோணத்தில் இருந்து புறப்படும். மேற்கண்ட 3 நாள்களும் இந்த ரயில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.08 மணிக்கு புறப்படும் என திருச்சி ரயில்வே கோட்ட செய்தி - மக்கள் தொடா்புத் துறை அலுவலா் ஆா். வினோத் தெரிவித்துள்ளாா்.