சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு
துவரங்குறிச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 11:00 PM
துவரங்குறிச்சி அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.
மருங்காபுரி ஒன்றியம், செவந்தாம்பட்டியை சோ்ந்த சின்னையா மனைவி பழனியாயி (75). இவா், அண்மைக்காலமாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
வியாழக்கிழமை திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செவந்தாம்பட்டி பிரிவு அருகே சாலையை கடக்க முற்பட்டபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பழனியாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா், மூதாட்டியின் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்து உறவினா்களிடம் ஒப்படைத்தனா். விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.