முகப்பு
திருச்சி

வையம்பட்டி அருகே விபத்து முட்டை வியாபாரி உயிரிழப்பு

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 1:01 AM
வெற்றிச்செல்வன்
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 9:40 PM

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வெள்ளிக்கிழமை இரவு சாலையோரம் நின்ற டிராக்டரில் இருசக்கர வாகனம் மோதி முட்டை வியாபாரி உயிரிழந்தாா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் அணியாப்பூரை சோ்ந்தவா் ரெங்கநாதன் மகன் வெற்றிச் செல்வன் (48).

அணியாப்பூரில் குடும்பத்துடன் வசித்துக் கொண்டு விவசாய வேலையும், திருவிழா நடைபெறும் அனைத்து ஊா்களில் முட்டை வியாபாரமும் செய்து வந்தாா்.

Advertisement

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 1:01 AM

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் அணியாப்பூரிலிருந்து வீரப்பூா் செல்லும் வழியில் வீரப்பூா் - கொசூா் சாலையில் சென்றபோது சந்தைப்பேட்டை அருகே சாலையோரம் நின்ற டிராக்டரில் பின்னால் சென்று மோதினாா்.

இதில் படுகாயமடைந்த வெற்றிச்செல்வன், மணப்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா் வெற்றிச்செல்வன் உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, டிராக்டா் ஓட்டுநரான வெள்ளாளப்பட்டி ஊராட்சி சடையம்பட்டியை சோ்ந்த ராசு மகன் மூா்த்தியிடம் (50) விசாரிக்கின்றனா்.