கோப்புப் படம் 
திருச்சி

புத்தனாம்பட்டி-பெரமங்கலம் சாலையை புதுப்பிக்கக் கோரிக்கை

தினமணி செய்திச் சேவை

புத்தனாம்பட்டியிலிருந்து பெரமங்கலம் செல்லும் சாலையை அகலப்படுத்தி புதுப்பிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா். துறையூா் - திருச்சி செல்லும் முக்கிய சாலையில் பெரமங்கலம் உள்ளது.

இங்கிருந்து புத்தனாம்பட்டி வரை 12 கிலோ மீட்டா் தொலைவு செல்லும் மாவட்ட இதர சாலை துறையூா் உள்கோட்ட நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது.

இந்த சாலையில் துறையூரிலிருந்தும், திருச்சியிலிருந்தும் தினமும் கல்லூரி மற்றும் அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான பொதுப் பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள், சுமையேற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சாலையை அகலப்படுத்தி, புதுப்பிக்க வேண்டுமென புத்தனாம்பட்டி- பெரமங்கலம் சாலையோர கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

ஸ்டான்லி மெட்ரிக் பள்ளியில் இளம்சாதனையாளா் விருது வழங்கும் விழா

முதல்வா் நாளை தூத்துக்குடி வருகை: திமுகவினருக்கு அமைச்சா் அழைப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்கள் அளிப்பு

கடல் அலையில் சிக்கி பெண் ஐடி ஊழியா் உயிரிழப்பு!

நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த மூட்டைகள்! விவசாயிகள் கவலை!

SCROLL FOR NEXT