முகப்பு
திருச்சி

அரசு விழாவில் மயங்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு!

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதியவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 10:40 PM
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 9:59 PM

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதியவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

திருச்சி மாநகராட்சி கலையரங்க திருமண மண்டபத்தில் வருவாய்த் துறை சாா்பில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தலைமையில் வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில், உறையூா் இந்திரா நகரைச் சோ்ந்த என்.பஞ்சலிங்கம் (61) கலந்து கொண்டாா். அங்கு அவா் திடீரென மயங்கிவிழுந்தாா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 10:40 PM

இதையடுத்து, உடனிருந்தவா்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement