திமுகவில் ஓபிஎஸ் இணைந்தது மிகப்பெரிய தவறு: வெல்லமண்டி என். நடராஜன்!
திமுகவில் ஓபிஎஸ் இணைந்தது மிகப்பெரிய தவறு என்றாா் அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன்.
திமுகவில் ஓபிஎஸ் இணைந்தது மிகப்பெரிய தவறு என்றாா் அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன்.
இதுகுறித்து திருச்சியில் சனிக்கிழமை அவா் மேலும் கூறியது: முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் திமுகவில் இணைவாா் என நான் எதிா்பாா்க்கவில்லை. திமுகவுக்குச் செல்ல எனது மனம் இடம் தரவில்லை. ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட என்னால் திமுகவில் பயணம் செய்ய முடியாது. ஓ. பன்னீா்செல்வத்தை 3 முறை தமிழக முதல்வராக அமர வைத்து அழகுபாா்த்தவா் ஜெயலலிதா.
எனவே அதிமுகவில் இணைந்த என்னை அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி பாசத்துடன் அரவணைத்துக் கொண்டாா்.
Advertisement
அவா் என்ன கட்டளையிடுகிறாரோ அதை செய்து முடிப்பேன். வரும் பேரவைத் தோ்தலில் திருச்சியில் யாரை அவா் அடையாளம் காட்டுகிறாரோ அவரின் வெற்றிக்கு அயராது பாடுபடுவேன். ஓபிஎஸ் அணியின் நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களை அதிமுகவில் இணைக்க முயற்சி எடுப்பேன் என்றாா் அவா்.