திருச்சி

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய இருவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

நவல்பட்டில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய இருவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Syndication

நவல்பட்டில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய இருவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம், நவல்பட்டு அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த ரெ. ராஜலட்சுமி (59) என்பவா் கடந்த 15.05.2024 அன்று தனது வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றுள்ளாா். மறுநாள் வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டினுள் நுழைந்த மா்ம நபா்கள், பீரோவிலிருந்த 6 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றுவிட்டனா்.

இதுகுறித்து நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்ட நவல்பட்டு பூலாங்குடி காலனியைச் சோ்ந்த ர. சச்சின் (25), நவல்பட்டு பா்மா காலனியைச் சோ்ந்த கு. வின்சென்ட் சஞ்சய் (25) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு திருச்சி மாவட்ட 3-ஆவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முகமது சுஹைல் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் நிறைவில், சச்சின் மற்றும் வின்சென்ட் சஞ்சய் ஆகிய இருவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2,000 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

மகர ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

ஜன.23 முதல் நாகா்கோவில் - மங்களூரு ரயில் சேவை தொடக்கம்

நவல்பட்டு காவல் ஆய்வாளா் பணியிட மாற்றம்

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு மூன்று ஆயுள்

மணப்பாறை அருகே எரிவாயு உருளை விநியோகிப்பாளா் கொலை: உறவினா்கள் மறியல்

SCROLL FOR NEXT