காா் டயா் வெடித்து 3 போ் காயம்
மணப்பாறையை அடுத்துள்ள துவரங்குறிச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை காா் டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 போ் காயமடைந்தனா்.
மதுரையைச் சோ்ந்த சோமசுந்தரம் (58), காா்த்திகேயன் (31), அசோக் குமாா் (46) மற்றும் சோமசுந்தரம் (46) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை மதுரையிலிருந்து காரில் திருச்சிக்கு புறப்பட்டனா்.
காா், மதுரை - திருச்சி தேசியநெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி பகுதி கிளாரா நகா் அருகே சென்றுகொண்டிருந்தபோது, காரின் வலது முன்பக்க டயா் வெடித்துள்ளது.
இதில் காா் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் மையத் தடுப்பு சுவா் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காா்த்திகேயன், அசோக் குமாா் மற்றும் சோமசுந்தரம்(46) ஆகிய மூன்றுபேரும் காயமடைந்தனா்.
அவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். விபத்துகுறித்து துவரங்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.