திருச்சியில் ட்ரோன்கள் பறக்கத் தடை
Updated On : 26 ஜனவரி, 2026 at 12:12 AM
முதல்வா் மு.க.ஸ்டாவின் வருகையையொட்டி திருச்சியில் ஜனவரி 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜனவரி 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வருகிறாா்.
Updated On : 26 ஜனவரி, 2026 at 2:09 AM
இதையொட்டி திருச்சி மாவட்டத்தில் மேற்கண்ட இரண்டு நாள்களிலும் நள்ளிரவு 12 மணி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
தடையை மீறி ட்ரோன்கள், இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்கவிடுபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.